சென்னையில் ஆரவாரத்துடன் புத்தாண்டு கொண்டாடடும் மக்கள் ................'''' - THAGAVAL
Ads Here

Sunday, 31 December 2017

சென்னையில் ஆரவாரத்துடன் புத்தாண்டு கொண்டாடடும் மக்கள் ................''''

புத்தாண்டு
இன்னும் சில நிமிடங்களில் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. கடற்கரைகள், நட்சத்திர விடுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குப் போலீஸார்  கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு சென்னை மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலைகளிலும் இன்றிரவு இரவு 9 மணி முதல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி வரை இரு சாலைகளிலும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி இன்று சென்னை மெரினாவில் வாகனங்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. அனைவரும் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி நடந்து தான் செல்ல வேண்டும். போலீஸார் கடுமையான சோதனைகளை நடத்தினார்கள். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானவர்கள் புத்தாண்டை வரவேற்கக் குவிந்திருக்கிறார்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி மட்டுமே எதிரொலிக்கிறது. நம்பிக்கையோடு அடுத்த ஆண்டுக்கு முகம் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். எல்லோர் மனங்களும் மகிழட்டும்.. நல்லதே நடக்கட்டும்

No comments:

Post a Comment