பிரமிடு கட்டியவர்கள் தமிழர்களா?
இந்தக் கேள்விக்கு ஆமாம் அ இல்லைன்னு ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்தக் கேள்விக்கான பதில் சற்று ஆதாரப் பூர்வமாக அமைய வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் தேட வேண்டும்.
இந்தத் தேடலை இரண்டு விதத்தில் தொடங்கலாம்.
1. பிரமிடுகள் இருக்கும் எகிப்து நாட்டுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு.
2. உலகளவில் எங்கெல்லாம் பிரமிடுகள் அல்லது தொல்லியல் கட்டட அமைப்புகள் இருக்கின்றதோ (உலகின் பழங்கால தொல்லியல் இடங்களாக சர்வதேச அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இடங்கள்) அவைகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு.
1. பிரமிடு காணப்படும் எகிப்து தவிர
அத்தகைய முக்கிய தொல்லியல் இடங்கள்:
1. மாயன் இனம் வாழ்ந்த மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்கா.
2. இன்கா இனம் வாழ்ந்த பெரு உள்ளிட்ட தென் அமெரிக்கா.
3. ரப்பா நூயி என்று அழைக்கப்படும் ஈஸ்டர் தீவுகள் (தென் அமெரிக்க சிலி நாட்டுக்கு சொந்தமானது)
4. அங்கோர்வாட் கோயில் உள்ள தென்கிழக்கு ஆசிய கம்போடியா நாடு.
5. குணாங் பதாங் பிரமிடு உள்ள இந்தோனேசியா
6. உளூரு பாறை (Uluru or Ayer Rock) உள்ள ஆஸ்திரேலியா.
7. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள குத்துக்கல் வரிசை.
மீண்டும் நமது மிக முக்கியமான புரிதலுக்கு:
இத்தகைய கட்டுரைகள்
1. வீண் பழம்பெருமை பேசி வெட்டிப் பொழுதைப் போக்க அல்ல.
2. திட்டமிட்டு நமக்கு மறைக்கப்பட்ட, மறைக்கப்படும் நமது வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
எத்தனை பழைமையான கீழடிகள் கிடைத்தாலும் ஆரியம் அவைகளை அப்புறப்படுத்தவே செய்யும்.
3. தமிழரின் வளமான, தலைசிறந்த எதிர்காலமானது அறிவியல் பூர்வ மற்றும் ஆதாரப்பூர்வ வரலாற்று அடித்தளம் மீது கட்டப்பட்டால் தான், அந்நிய மற்றும் உள்குத்தும் எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு சவாலாக மாற்று அரசியல் கட்டமைக்க முடியும். ஆதாரமற்ற ஒரு சில பழங்கதைகளோ, குத்து மதிப்பான அனுமானங்களோ, வெற்று இலக்கியக் குறிப்புகளோ நம் நோக்கத்தை வலிமைப்படுத்தாது. (அதேசமயம் நான் ஆய்வாளன் அல்ல, ஆர்வலன் தான். என்னுடைய இந்த சிறிய முயற்சியில் சில பல குறைபாடுகள் இருக்கலாம். ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் இதனை மேலும் செதுக்கலாம், செழுமைப்படுத்தலாம்)
4. தன் வரலாற்றை மறந்தவன் தனது எதிர்காலத்தையும் இழக்கிறான். உலகின் ஒவ்வொரு சிறந்த பண்பாடும் தனது வரலாற்றை பாதுகாக்கிறது. நமது தமிழ் பண்பாட்டு பாதுகாவலில் நம் ஒவ்வொருவரது கரமும் இணையட்டும். நமக்கு அவசியம் எதிர்கால தலைமுறை. எழுச்சி மிக்க தமிழரின் வளமான எதிர்காலமே நமது பகிர்வின் நோக்கம்.
5. தமிழரின் ஒட்டுமொத்த விடியலுக்கான போராட்ட வழிமுறைகளில் இதுவும் ஒரு போர்க்களமே. நாம் அனைவரும் போராளிகளே.
சரி களத்தில் நேரடியாக இறங்குவோம்.
நமது பிரமிடு தேடல் 5 பகுதிகளைக் கொண்டது:
1. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 1 பிரமிடின் சிறப்புகள்
2. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 2 வேர்ச்சொல், கட்டுமான நுட்பத்தில்
3. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 3 வானியலில்
4. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 4 கணக்கியலில்
5. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 5 தொல் நாகரீகங்களில்
இவை ஐந்தையும் ஒரே பதிவில் படிக்க இயலாது என்பதால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றெனக் காண்போம்.
நமது ஆய்வுத்தேடலை பிரமிடின் சிறப்புகளோடு தொடங்குவோம் :
1. எகிப்திய பிரமிடு (கீசா Giza பிரமிடு)
பற்றி 25 சிறப்புத் தகவல்கள்.
1. பழமையான 7 உலக அதிசயங்களில் மீதம் இருக்கும் ஒரே ஓர் அதிசயம் பிரமிடு மட்டுமே.
2. மிகப்பிரபலமான கீசா (Giza) பிரமிடுகள் கட்டப்பட்ட காலம் ஏறக்குறைய கி. மு. 2500.
ஆக இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை.
3. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எகிப்திய பிரமிடுகளின் எண்ணிக்கை 138.
4. பிரமிடுகள் பெரும்பாலும் நைல் நதியின் மேற்கு கரை பகுதியில் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன. மரணத்தை உணர்த்தும், சூரியனின் மறைவுப் பகுதியான மேற்கைக் குறிக்கும் விதத்தில் இறந்த மன்னர்கள், நதியின் மேற்குப்புறம் கட்டப்பட்ட பிரமிடுக்குள் வைக்கப்பட்டனர். காண்க:
5. குஃபு (Khufu) பிரமிடின் உயரம் 450 அடி. பிற பிரபலமான கட்டடங்களுடன் ஓர் ஒப்பீடு.
6. மேலே உள்ள குஃபு (Khufu) பிரமிடை விட 30 அடி அதிக உயரம் கொண்ட
கீசா பிரமிடு 481 அடி உயரம் உள்ளது.
7. இந்த கீசா என்ற ஒரே ஒரு பிரமிடின் ஒட்டுமொத்த எடை 52 இலட்சம் டன். (1 டன் = ஆயிரம் கிலோ)
8. பிரமிடின் அடித்தளம் 8 ஹெக்டர் பரப்பு கொண்டது.
9. ஒவ்வொரு அடித்தளக் கல்லும் ஒரு காரின் எடை உள்ளது.
10. அடித்தளக் கிரானைட் கற்கள் மொத்தம் 130.
11. ஒவ்வொரு கல்லும் 12 முதல் 70 டன் எடை வரை உள்ளது. அதிகபட்ச நீளம் 210 அடி.
12. பிரமிடின் அடித்தளம் 10 கால்பந்து மைதான அளவில்.
13. பிரமிடின் வெளிப்புறம் 6 கால்பந்து மைதான அளவு.
14. ஒரு கல்லின் அளவை நிற்கும் ஒரு நபரின் உயரம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அதே போன்ற 20 இலட்சத்திற்கும் (2 million) மேலான கற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.
15. மொத்தம் 20 இலட்சம் கற்களுக்கு மேல்...
16. பிரமிடுக்குள் 3 அரங்குகள் துல்லிய அளவுகளுடன் கட்டப்பட்டுள்ளது. அவற்றை அடைய 3 அடி நீள 3 அடி அகல சுரங்க வழிப்பாதை கட்டப்பட்டுள்ளது. ராஜா மற்றும் ராணிக்காக க்காக கட்டப்பட்ட மேல் மற்றும் கீழ் அரங்கங்களின் கிடைமட்ட, செங்குத்து அளவுகள் மிகத் துல்லியமானவை.
பிரமிடு என்கிற பெரிய கட்டிடத்துக்குள், கற்குவியலுக்குள் கட்டப்பட்ட உள் அரங்கங்கள், வெளியில் உள்ள அளவு கணக்கீடுகளுக்கு ஏற்றாற்போல் கட்டப்பட்டிருப்பது சிறப்புமிக்கது.
செங்குத்து (Vertical), கிடைமட்ட (Horizontal) அளவுகளை மதிப்பிடும் ஆய்வாளர்.
17. நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் "Mirror Image" என அழைக்கப்படும் எதிர்ப்புறம் ஒரே வகையான கல் அமைப்பில் அமைக்கப்படும் கட்டுமானம்.
18. பொதுவாக பிரமிடு 4 பக்கங்கள் கொண்டது என்று நினைப்போம். ஆனால், இந்த கீசா பிரமிடு 8 பக்கங்கள் கொண்டது. 8 பக்கங்கள் கொண்ட பிரமிடினை துல்லியமான அளவுகளோடு கட்டுவது இன்றைய நவீன தொழில்நுட்பத்திலும் கூட எளிதானது அல்ல.
19. இன்றைய அளவீட்டின்படி சுமார் 42 மாடி கட்டட உயரத்தில் கட்டப்பட்ட பிரமிடு.
20. பிரமிடைக் கட்டி முடிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்:
1. 20 வருடங்கள் ஆகி உள்ளது.
2. 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுண்ணாம்பு கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது; எனும் போது
3. ஒரு நாளில் 12 மணி நேரமும், வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்யப்பட்டிருந்தால் மட்டுமே
ஒவ்வொரு இரண்டேகால் நிமிடத்திற்கும் 1 கல்
என கட்டப்பட்டிருக்க வேண்டும்.
21. பிரமிடும் - அஸ்வான் அணை கோயில் சிலைகளும்:கால அளவில் ஒர் ஒப்பீடு.
1960ல் பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்று, எகிப்தில் உள்ள அஸ்வான் அணையின் நீர் வந்து அபு சிம்பல் கோயிலை மூழ்கச் செய்ய விடாமல் தடுக்க அந்தக் கோயிலை அப்படியே இடம் பெயர்த்தனர்.
[அஸ்வான் அணையும் அபு சிம்பல் கோயிலும் (Abu Simbel)]
அபு சிம்பல் கோயிலுக்கு அருகில்...
வெறும் 2200 கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோயில்
கற்களை அகற்ற மட்டுமே 5 வருடங்கள் ஆனது.
ஆனால்
பிரமிடில் பயன்படுத்தப்பட்ட
கற்கள் 20 இலட்சம், கட்டி முடிக்கப்பட்டதோ 20 வருடங்களில்.
நவீன தொழிநுட்பங்களைக்கொண்டு கற்களை அப்புறப்படுத்த மட்டுமே அந்த பிரெஞ்சு நிறுவனம் எடுத்துக்கொண்ட வருடங்கள் 12.
பிரமிடுகள் பற்றிய ஒரு சில தவறுதலான கருத்துக்களும் இருப்பது அதிர்ச்சியான ஆச்சரியமே.
22. பிரமிடுகள் என்றாலே எகிப்தில் மட்டும்தான் அவை இருக்கின்றன என்ற பொதுவான எண்ணம் உண்டு. நாம் ஏற்கனவே பார்த்தது போல எகிப்தில் 138 பிரமிடுகள் உள்ளன.
எகிப்துக்கு தெற்கே உள்ள சூடான் நாட்டில் தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பிரமிடுகள் உள்ளன. எண்ணிக்கை தான் அதிகமே ஒழிய, பெரிய உருவில் அவைகள் இல்லை.
23. எகிப்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் பிரமிடுகள் உள்ளன.
24. அப்படியானால் உலகின் மிகப்பெரிய பிரமிடு எங்கே உள்ளது என தேடினால் கிடைக்கும் பதில்:
மெக்சிகோவில் உள்ள மாயன்களின் சோலூலா (Cholula) பிரமிடு தான்.
சோலுலா பிரமிடு பற்றி விளக்கமாக தொன்மையான நாகரீகங்கள் என்ற பதிவில் விரைவில் காண்போம். இப்பதிவில் எகிப்து பிரமிடின் சிறப்புகள் மட்டும்.
சோலுலா பிரமிடு பற்றி விளக்கமாக தொன்மையான நாகரீகங்கள் என்ற பதிவில் விரைவில் காண்போம். இப்பதிவில் எகிப்து பிரமிடின் சிறப்புகள் மட்டும்.
எகிப்தின் கீசா பிரமிடு என்பது மேலே நாம் கண்ட அதிசய சிறப்புக்களை
மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நுணு நுணுக்கமான சிறப்புகள் கொண்டுள்ளது.
எனவே தான்
கீசா பிரமிடு இன்றுவரை உலக அதிசயம்.
கீசா பிரமிடு இன்றுவரை உலக அதிசயம்.
25. இப்ப உங்களுக்கு அந்த பிரமிடுக்குள்ள போய் சுத்திப்பாக்க ஆசை வந்திருக்குமே?
1. பிரமிடை உள்ளது உள்ளவாறே உள்ளே சென்று பார்க்க:
2. பிரமிடை ஆங்கில விளக்கத்தோடு மெய்நிகர் முறையில்:
3. பிரமிடில் உள்ள அரசனை புதைத்த அறையின் பாதுகாப்பை பார்க்கும் காணொளியில் ஒட்டுமொத்த கட்டுமானத்தையும் வித்தியாசமாய் காண:
4. நம்மில் சிலருக்கு பிரமிடின் வெளிப்புறமாக பிரமிடின் உச்சி வரை ஏறிப்பார்க்க ஆசை இருக்குமே. நிச்சயம் அனுமதி கிடைக்காது சிறைதான். ஆனால் அந்திரேயா என்ற 18 வயது ஜெர்மானிய இளைஞன் தடையை மீறி பிரமிடில் ஏறியதோடு காணொளியும் வெளியிட்டிருக்கிறார். அவர் செய்தது தவறுதான். ஆனால் முதல் முறை பிரமிடின் உச்சியிலிருந்து புகைப்படம் எடுத்து நாம் பார்க்க வழி செய்துள்ளார். பிரமிடின் வெளிப்புறமாக காணொளியில் ஏறிப்பார்க்க ஆசைப்படுவோர்
No comments:
Post a Comment