கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் தொங்கி உள்ளது... - THAGAVAL
Ads Here

Saturday, 30 December 2017

கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் தொங்கி உள்ளது...


கன்னியாகுமரியில் கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி முதல் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் தொங்கி உள்ளது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது. தற்போது அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீஸார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக கிறிஸ்மஸ் பண்டிகை, பள்ளிக்கூட விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. புத்தாண்டு வருவதால் வெளிநாட்டு பயணிகளும் வந்துக் கொண்டிருக்கிறார்கள். பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து செல்கிறார்கள். 
அதுபோலவே விவேகானந்தர் மண்டபத்துக்கும் மற்றும் திருவள்ளவர் சிலைக்கும் காத்திருந்து டிக்கெட் எடுத்து படகில் சென்று பயணிகள் பார்த்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள இரண்டு பார்க்கிங்களும் நிரம்பி உள்ளன. பலர் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரியில்  உள்ள விடுதிகள் அனைத்தும் தற்போது புக் செய்யப்பட்டுவிட்டன. புதிதாக வருபவர்பளுக்கு தங்க இடம் கிடைக்காத நிலை தான் உருவாகி உள்ளது. ஒருபுறம் மக்கள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை நிரம்பி வழிந்தாலும், ஒகி புயல், சுனாமி போன்ற தாக்கங்கள் மக்கள் மனதில் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது

No comments:

Post a Comment