தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா... - THAGAVAL
Ads Here

Saturday, 30 December 2017

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா...


தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். "மறுவார்த்தை பேசாதே" என்ற இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி மிகப் பிரபலமானது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை ஆரம்பத்தில் Mr.X எனப் பெயரிட்டு சஸ்பென்சாக வைத்திருந்தது படக்குழு.
ரசிகர்கள் மத்தியில் யார் இசையமைப்பாளர் என சமூக வலைதள விவாதங்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இசையமைப்பாளர்  Mr. X தர்புகா சிவா என தகவல் வெளியானது.இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை வௌியாக உள்ளது. இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 'விசிறி' என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர்  . தாமரை எழுதியுள்ள இப்பாடலை சித்ஶ்ரீராம் மற்றும் ஷாஷா திருப்பதி பாடியுள்ளனர். மறுவார்த்தை பேசாதே பாடலையும் சித்ஶ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment