
ஹாலிவுட், பாலிவுட் எனப் பல நடிகர், நடிகைகள் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சன்னி லியோன் இடம்பெற்றிருக்கிறார்.
ஸ்பிலிட்ஸ்வில்லா (Splitsvilla ) ரியாலிட்டி ஷோவுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சன்னி லியோன்தான் தற்போதைய டாக். ரியாலிட்டி ஷோவில் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவு செய்து வருகிறார். அவரது கணவர் டேனியலும் அவருடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் இந்த தருணத்தில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்கள் சன்னி லியோன் தம்பதி. ரஜினி சார் போஸ் கொடுத்திருந்தார். அந்த செல்ஃபி எனக்கு ரொம்ப பிடிச்சது.'' -
நேற்றைய வைரல் சன்னிலியோன்தான். காரணம், அவர் தத்தெடுத்திருக்கும் குழந்தைதான். மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த 21 மாதங்களே ஆன நிஷா கவுர் வெபர் (Nisha Kaur Weber) என்கிற ஏழைப் பெண்குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்திருக்கிறார். ''அவள் ரொம்ப அழகு. அவள் சிரிக்கும் அந்த நிமிடம் உங்கள் இதயம் உருகுவதை உங்களால் பார்க்க முடியும். நாங்கள் அவளைத் தனித்துவமாக வளர அனுமதிப்பேன். அவளைச் சுதந்திரமான பெண்ணாக வளர்ப்பேன்' என நிஷாவைப் பற்றி கூறியிருக்கிறார்
No comments:
Post a Comment