தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது, டிவில்லியர்ஸ் ஆடிய `மேஜிக் ஓவர்' குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டீன் நெகிழ்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம்செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடரைக்கூட வென்றிராத இந்திய அணிக்கு, இந்தச் சுற்றுப்பயணம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. அதேபோல, மிக வலுவான இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றிபெறுவது தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இந்நிலையில் நேற்று, முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 50 ரன்கள் எடுப்பதற்கு முன்னதாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் டிவில்லியர்ஸ் மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பால், டீம் ஸ்கோர் 250 ரன்களைத் தாண்டியது. இதில், டிவில்லியர்ஸ்மற்றும் டூப்ளிசிஸ் முறையே, 65 மற்றும் 62 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே திணறியது. ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.
No comments:
Post a Comment