நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமல்ல; இந்தியாவில் அதிகமான கார் கலெக்ஷன் வைத்திருப்பவர்களில் முதலிடத்தில் இருக்கும் கார்காரரும் - THAGAVAL
Ads Here

Monday, 8 January 2018

நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமல்ல; இந்தியாவில் அதிகமான கார் கலெக்ஷன் வைத்திருப்பவர்களில் முதலிடத்தில் இருக்கும் கார்காரரும்

நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமல்ல; இந்தியாவில் அதிகமான கார் கலெக்ஷன் வைத்திருப்பவர்களில் முதலிடத்தில் இருக்கும் கார்காரரும் அம்பானியேதான்! தெற்கு மும்பையில் உள்ள அம்பானியின் அன்ட்டிலியா வீட்டில் மட்டும் கிட்டத்தட்ட 350 கார்கள் அணிவகுத்து வீற்றிருக்கின்றன. ‘ஒன்றரை நாளுக்கு ஒரு கார்’ என்ற வகையில் பயன்படுத்தினால்கூட பல கார்கள் வேலையே பார்க்காமல் ஓபி-தான் அடிக்கும்.
இப்போது, தந்தை வழியில் கார் கலெக்ஷனில் தனது கவுன்ட் டவுணை ஆரம்பித்து விட்டிருக்கிறார், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. ஜியோ ஆரம்பித்த புதிதில், கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஈஸியாக அந்தப் பதவியைத் தட்டிப் பறித்தவர் ஆகாஷ் அம்பானி. ‘உங்களுக்கு டேட்டாவை லேட்டாக்கலாமா?  ஜியோ சம்பந்தமாக எந்த முக்கிய முடிவுகள் எடுத்தாலும் அதில் முதன்மையில் இருப்பவர் ஆகாஷ் அம்பானிதான்.
ஏற்கெனவே சில பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஆகாஷ், காஸ்ட்லி கார்களில் முதல் கவுன்ட் டவுணாக, 'பென்ட்லி பென்டாய்கா' என்னும் காரை வாங்கியிருக்கிறார். அம்பானி குடும்பத்தினர் கார் வாங்குவதில் ஒரு ஸ்டைலை ஃபாலோ பண்ணுவார்கள். அதாவது, வீட்டிலிருந்து கிளம்பி திடீரென சொல்லாமல் கொள்ளாமல் ஒரு காஸ்ட்லி காரில் வந்திறங்குவது அம்பானி வீட்டினரின் ஸ்டைல். அப்படித்தான் திடீரென பென்ட்லி பென்டாய்கா காரில் ஆகாஷ் பயணித்தபோது, பத்திரிகையாளர்கள் கண்ணில் அகப்பட்டுக் கொண்டார். அப்படியென்றால், புதிதாக பென்ட்லி கார் வாங்கியிருக்கிறார் என்று அர்த்தம்.
இந்தியாவின் காஸ்ட்லி எஸ்யூவி என்ற முதல் பெருமையை பென்ட்லி பென்டாய்கா தட்டிச் செல்கிறது. ஆம்! இந்த காரின் ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய். இன்னொரு ஸ்பெஷல் - இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகிறது. அதனால், ஒரு இந்தியப் பொருளைப் பணம் கொடுத்து வாங்கியதில் பெருமை கொள்கிறாராம் ஆகாஷ் அம்பானி. ‘‘இனிமேல் இதில்தான் என்னுடைய பயணம்!’’ என்றும் சொல்லியிருக்கிறாராம் ஆகாஷ்.  இந்தியத் தயாரிப்பு என்பது மட்டுமில்லை; ஆகாஷுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் பென்ட்லி தயாராவதும் இதை அவர் செலக்ட் செய்ததற்கு ஒரு முக்கியக் காரணம். பென்ட்லி பென்டாய்காவில் பச்சை நிறம்தான் பிரதானம். லிஸார்ட் கிரீன், குரொக்கொடைல் கிரீன், பிஸ்டாச்சியோ கிரீன், லீஃப் கிரீன், ஆலிவ், எமரால்டு, பைன், பிக்கிள் கிரீன் என்று பச்சைக் கலரில் மட்டும் 12 மாடல்களில் வருகிறதாம் பென்டாய்கா. ஆகாஷ் தேர்ந்தெடுத்திருப்பது பிரிட்டீஷ் ரேஸிங் கிரீன்.
அம்பானி கார்
கலருக்கா 5 கோடி என்றால்... இல்லை. மிக்ஸி, கிரைண்டர் தவிர எல்லா வசதிகளும் இதில் உண்டு என்றால், மற்றவற்றை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மற்ற கார்களில் உள்ள ஏபிஎஸ், ஏர்பேக், ட்ராக்ஷன் கன்ட்ரோல், 2 விதமான சஸ்பென்ஷன் செட்-அப், பார்க்கிங் அசிஸ்ட் என்று அதையும் தாண்டி வேறு எந்த எஸ்யூவி-க்களிலும் இல்லாத எதுவுமே இதில் இல்லாமல் இல்லை. உலகின் காஸ்ட்லியான பிரீட்லிங் முல்லினர் என்ற கடிகாரம் இதில் ஸ்பெஷல் அம்சம். இந்தக் கடிகாரத்தின் விலை மட்டும் 1.95 கோடியாம். (மணி பார்க்கிறதுக்குக்கூட கோடிக் கணக்குலதான் பார்ப்பாங்க போல!) கதவுகளில் உள்ள கார்பன் ஃபைபர் ஃபினிஷிங், செம வெயிட்லெஸ். காற்றில் பறப்பதற்கு இது உதவும்.
பவர் விஷயத்திலும் மிரட்டுகிறது பென்டாய்கா. 6.0 லிட்டர் (அதாவது 6000 சிசி) கொண்ட இந்த இன்ஜினில் 12 சிலிண்டர்கள் இருக்கின்றன. இதன் பவர் 600 bhp. இது லம்போகினி, புகாட்டி போன்ற உலகின் காஸ்ட்லி கார்களுக்கு இணையான இன்ஜின் திறன். 100 கி.மீ வேகத்தை இது 4.1 விநாடிகளில் கடக்கும். இந்த இன்ஜின் திறனுக்கு இந்த விநாடிகள் அதிகம்தான். காரணம், இது எடை அதிகம் கொண்ட எஸ்யூவி. இதுதான் இந்தியாவின் அதிவேகம் கொண்ட எஸ்யூவி. இந்த காருக்கு MH01 CL123 என்கிற ஃபேன்ஸி நம்பரையும் சில்லறையாக பல லட்சங்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஆகாஷ்.
அண்ணன் எட்டு அடி என்றால், தம்பி 80 அடி பாய்ந்திருக்கிறார். ஆம்! அவரது தம்பி ஆனந்த் அம்பானி, ஆகாஷ் பென்ட்லி புக் செய்த அதே நேரத்தில் ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். அதுவும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திலேயே விலை உயர்ந்த பான்டம் டிராப்ஹெட் கூபே மாடலை வாங்கி அண்ணனுக்குப் பெப்பே காட்டியிருக்கிறார் தம்பி.
அம்பானி கார்
இந்தியாவில் இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 8 கோடி ரூபாய். ஆன்ரோடு விலை 10 கோடியைத் தாண்டுகிறது. ஃபோர்டு எண்டேவர் மற்றும் ஃபார்ச்சூனர் கார்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய பாதுகாப்புப் படையுடன் அம்பானி பையன்கள் தங்கள் காஸ்ட்லி கார்களில் மும்பையை வலம் வந்ததுதான் இந்த வாரத்தில் டாக் ஆஃப் தி இந்தியா! அடுத்த வாரம் என்ன காரோ? எத்தனை கோடியோ?
என்னமோ போங்க அம்பானி பசங்களா?

No comments:

Post a Comment