கர்ப்பிணிப்பெண், பேருந்திலிருந்து விழுந்து பலியான சம்பவம்பேருந்தில் உட்கார இடம்கிடைக்காததால் நின்றுகொண்டே பயணம்செய்த - THAGAVAL
Ads Here

Sunday, 7 January 2018

கர்ப்பிணிப்பெண், பேருந்திலிருந்து விழுந்து பலியான சம்பவம்பேருந்தில் உட்கார இடம்கிடைக்காததால் நின்றுகொண்டே பயணம்செய்த






 
கேரளாவில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 29-ம் தேதி, 34 வயதான நஷீதா, கேரளாவின் தீகோயி என்னும் பகுதியிலி ருந்து எரட்டுப்பட்டா என்னும் இடத்துக்கு தனியார் பேருந்தில் பயணம்செய்துள்ளார். பேருந்து கூட்டமாக இருந்ததால், பேருந்தின் படிகளுக்கு அருகிலேயே நின்று பயணம்செய்துள்ளார் நஷீதா. கர்ப்பிணிப்பெண் என்றும் பாராமல் அவரை உள்ளே நுழையக்கூட சக பயணிகள் வழிவிடவில்லை. பேருந்து யூ டர்ன் அடித்தபோது, நஷீதா நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால், நஷீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடந்த ஐந்து நாள்களாக உயிருக்குப் போராடிய நஷீதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நஷீதா பயணம்செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து மருத்துவமனையில் உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவரின் மனதையும் உலுக்கியது

No comments:

Post a Comment