புத்தாண்டில் ரூ.1,900 கோடிக்கு விற்பனை;சாதனை படைத்த ஆப்பிள் ஆப் - THAGAVAL
Ads Here

Saturday, 6 January 2018

புத்தாண்டில் ரூ.1,900 கோடிக்கு விற்பனை;சாதனை படைத்த ஆப்பிள் ஆப்

ஆப்பிள் பயனர்கள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டில், ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் செயலி மற்றும் விளையாட்டுகளை வாங்கியோ, பதிவிறக்கம் செய்தோ ரூ.1,900 கோடி வணிகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது ஜூலை 2008-ல் ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் அதிக வியாபாரம் ஆகும்.
குறிப்பாக கிறிஸ்துமஸ் நாளில் இருந்து புத்தாண்டு வரை 7 நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5,637 கோடி வியாபாரம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லர், ''புதிய ஆப் ஸ்டோருக்கு ஆப்பிள் பயனாளர்கள் அளிக்கும் வரவேற்பைக் காண சிலிர்ப்பாக உள்ளது. புதிய செயலிகள் மற்றூம் விளையாட்டுகளை பயனாளர்கள் ரசிக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஆப்பிள் இயங்குதள மேம்பாட்டாளர்கள் 2017-ல் மட்டும் 2016-ம் ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக சம்பாதித்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
புதிய ஆக்மெண்டட் ரியாலிட்டி வசதிகளுடன் 'போகிமான் கோ' விளையாட்டு, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment