இவ்வளவு பெரிய செல்வந்தராக இருக்கும் பில்கேட்ஸின் வீடு எப்படி இருக்கும். நிச்சயமாக நாம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வடிவிலான ஆடம்பரமான வீட்டைத்தான் கட்டியுள்ளார்.
வாஷிங்டன் எஸ்டேட் பகுதியில் 66000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பில்கேட்ஸின் வீடு பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இவரது வீட்டின் பெயர் சனாடு.
இந்த வீட்டை சுற்றிலும் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இதனால் வெயிலின் தாக்கம் கொஞ்சமும் இருக்காது.
வீடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் திரைகள் உள்ளன இவற்றின் மதிப்பு மட்டும் ரூ. 5 2லட்சம் . சுவரில் உள்ள கலை ஓவியங்கள், படங்கள் பிடிக்கவில்லையென்றால், பட்டனை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம் இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி.
பில்கேட்ஸ்க்கு என்றே 60 அடியில் தனியாக நீச்சல் குளம் உள்ளது. அதுமட்டுமின்றி 3900 சதுர அடியில் செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.
2500 சதுர அடியில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. நீராவி அறை, உள்பட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உடற்பயிற்சி செய்தவற்கு பல்வேறு வசதிகள் உள்ளன.
வீட்டில் 24 கழிவறைகள் உள்ளன. மேலும் 10 குளியல் அறைகள் உள்ளன.
வரவேற்பு அறையில் 200 விருந்தினர்கள் அமரலாம். 150 பேர் விருந்து சாப்பிடும் பெரிய அரங்கம் இருக்கிறது. மாளிகையின் வெவ்வேறு பகுதிகளில் 6 சமையலறைகள் உள்ளன. எந்த நேரமும் விருந்துக்கு தயாராக ஊழியர்கள் உள்ளனர்.
இங்குள்ள பிரம்மாண்ட நூலகத்தில், பில்கேட்ஸ் அதிக விலைக்கு ஏலத்துக்கு வாங்கிய புத்தகங்கள், பிரபலங்களின் கையால் எழுதிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வீட்டில் உள்ள திரையரங்கத்தில் 20 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். இங்கு பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரம் உட்பட பல வசதிகள் உள்ளன.
23 கார்களை நிறுத்தும் அளவுக்கு பெரிய கார் பார்க்கிங் வசதி உள்ளது. இது தவிர 10 கார்கள் நிறுத்தும் அளவுக்கு அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.
ஹைடெக் சென்சார்கள் வீடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. அறைகளின் வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி ஆகியவற்றை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.. இதற்கென இங்கு வருபவர்களுக்கு தனியாக பின் எண்கள் கொடுக்கப்படும். அவர்கள் பதிவு செய்யும் வெப்பம் மற்றும் விளக்குகளின் ஒளி அளவுக்கு ஏற்ப சூழல்கள் தானாக மாறும்.
வீட்டில் உள்ள ஏரிக்கரையில் கரீபியன் கடலில் இருந்து கொண்டுவரப்பட்ட பீச் மண் உள்ளது.
இந்த வீட்டை சுற்றிப்பார்க்க ஒரு நாளைக்கு 124 மில்லியன் டாலர் வேண்டும். அதாவது பில்கேட்ஸ் வீட்டை சுற்றி பார்க்க ரூ. 22 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வேண்டும்.
இந்த வீட்டை 1988ம் ஆண்டு 13 கோடிக்கு வாங்கிய பில்கேட்ஸ் பின்னர் 386 கோடி ரூபாய் செலவழித்து புதிதாக மாற்றிக் கட்டியுள்ளார்.
இந்த வீட்டிற்காக பில்கேட்ஸ் ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரி செலுத்துகிறார்
No comments:
Post a Comment