ஆக்ஸ்போம் இன்டர்நேஷனல் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பில்கேட்ஸ், அடுத்த 25 ஆண்டுகளில் தனது 86 வயதாகும் போது, அவர் உலகின் முதல் மாபெரும் கோடீஸ்வரர் ஆக உள்ளார் என தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு முதல் பில்கேட்சின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 11 சதவீதம் அதிகரித்து வருகிறது.
2006ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பில்கேட்ஸ் விலகிய போது அவரது சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர். 2016 ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது அவரது தனிப்பட்ட அறக்கட்டளையின் வழியாக சேர்ந்த சொத்தாகும். உலகின் மற்ற செல்வந்தர்கள், இவரின் சொத்து மதிப்பில் பாதி அளவே கொண்டுள்ளனர். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலின்படி, பில்கேட்சின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக உள்ளது.
8 பேர் மட்டுமே பில்லினர்கள் :
2016 ம் ஆண்டின் மார்ச் மாத ஆய்வறிக்கையின்படி உலகில் 8 பேர் மட்டுமே பில்லினர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களில் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பெர்க், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க், ஆரிகிள் நிறுவனத்தின் லேரி எலிசன், அமேசான் தலைமை நிர்வாகி ஜெப் பிஜோஸ் உள்ளிட்டோரும் அடக்கம்
No comments:
Post a Comment