
, ''ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவுக்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலை பகுதியிகளில் 100-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாமல் இருக்கிறது. பர்கூர் ஊராட்சியில் மட்டும் 36 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு வாழும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், மலை வாழ் மக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களையும், அங்கு விளையும் பொருள்களையும் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்தியூருக்குத்தான் வரவேண்டும்.
சாதாரண நாள்களில் காலை 5:00, 10:00, மதியம் 3:00 மணிக்கு மட்டுமே பஸ் போக்குவரத்து இருக்கும். தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 2 முறை மட்டுமே பேருந்து 36 மலை கிராமங்களுக்கும் சென்று வருகிறது. அதனால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்து மேல் தளத்தில் பள்ளிக் குழந்தைகளும், முதியோரும் அமர வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

No comments:
Post a Comment