
மதியம் வரை அறை திறக்கப்படவில்லை. இதனால், விடுதி ஊழியர்கள் அறைக்குள் நுழைந்தனர். இருவரையும் எழுப்பினர். ஆனால், அவர்கள் கண்விழிக்கவில்லை. அப்போது, எமிலியா, பிணமாகக் கிடப்பது தெரிந்தது. அலக்ஸி ஜோயல் மயக்கத்தில் இருப்பதும் கண்டறிந்த போலீஸார், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எமிலியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விடுதி ஊழியர்களிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, எமிலியாவும் அலக்ஸி ஜோயலும் சேர்ந்தே நேற்றிரவு மது அருந்தினர். இரவு நீண்ட நேரம் அவர்கள் தங்கியிருந்த அறையில் லைட் எரிந்துகொண்டிருந்தது. எந்தவித சத்தமும் அறையிலிருந்து கேட்கவில்லை. நேற்று காலையில் அறை எடுத்துத் தங்கிய அவர்களில் எமிலியா எப்படி இறந்தார் என்று தெரியவில்லை" என்றனர். வெளிநாட்டுக் காதல் ஜோடி தங்கியிருந்த அறையிலிருந்து மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் மற்றும் அவர்களின் உடைமைகள், பாஸ்போர்ட்டுகள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், படுக்கையில் சடலமாகக் கிடந்த எமிலியாவின் உடைகள் அலங்கோலமாக இருந்தன. இதனால் எமிலியாவின் மரணத்துக்கான காரணத்தில் சில சந்தேகங்கள் போலீஸாருக்கு எழுந்துள்ளன. எமிலியாவின் மரணம் தொடர்பாக அந்த நாட்டுத் தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறோம். இவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
No comments:
Post a Comment